முக்கிய செய்திகள் மாணவர்களுக்கு பயனுள்ள செய்திகள், ஆசிரியர்களுக்கு பயனுள்ள அரசாணைகள் மற்றும் இயக்க செய்திகளை இந்த வலை தளத்தில் வெளிஇட tnhspgtadpuri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். ************** மாணவர்களுக்கு பயனுள்ள செய்திகள், ஆசிரியர்களுக்கு பயனுள்ள அரசாணைகள் மற்றும் இயக்க செய்திகளை இந்த வலை தளத்தில் வெளிஇட tnhspgtadpuri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். ********** மாணவர்களுக்கு பயனுள்ள செய்திகள், ஆசிரியர்களுக்கு பயனுள்ள அரசாணைகள் மற்றும் இயக்க செய்திகளை இந்த வலை தளத்தில் வெளிஇட tnhspgtadpuri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். ********* !!!!!!!!!!!மாணவர்களுக்கு பயனுள்ள செய்திகள், ஆசிரியர்களுக்கு பயனுள்ள அரசாணைகள் மற்றும் இயக்க செய்திகளை இந்த வலை தளத்தில் வெளிஇட tnhspgtadpuri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். ********** .!!!!!!!!!!!மாணவர்களுக்கு பயனுள்ள செய்திகள், ஆசிரியர்களுக்கு பயனுள்ள அரசாணைகள் மற்றும் இயக்க செய்திகளை இந்த வலை தளத்தில் வெளிஇட tnhspgtadpuri@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

11 October 2016

06.10.2016. தருமபுரி மாவட்ட (TNHSPGTA) செயற்க்குழுக்கூட்டம். மாநில தலைவர் முனைவர் திரு. வே.மணிவாசகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

06.10.2016.
--------------------------------------------
தருமபுரி மாவட்ட (TNHSPGTA)
---------------------------------------------- செயற்க்குழுக்கூட்டம்.
--------------------------------------

     TNHSPGTA ன்  மாவட்ட செயற்க்குழுக்கூட்டம் அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  மாலை ( 06.10.2016)   7.00 மணி அளவில் சிறப்பாக  நடைபெற்றது.

மாவட்ட தலைவர்
ஈ.ப.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்
மாநில தலைவர் முனைவர் திரு. வே.மணிவாசகன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

புதிய மாவட்ட பொறுப்பாளர்
-------------------------------------------------
  தேர்வு
--------------
1. அதிமான்கோட்டை (ஆ) பள்ளி தமிழ் முதுகலை ஆசிரியரும், மாவட்ட துணைத்தலைவருமான திரு.காவேரி அவர்கள் புதிய மாவட்ட செயலாளராகவும்,

2. பி.அக்ரஹாரம், வணிகவியல் முதுகலை ஆசிரியர்,  திரு.சுப்பிரமணியன்  அவர்கள்  மாவட்ட பொருளாளராகவும்,

3. நத்தமேடு, விலங்கியல்  முதுகலை ஆசிரியரும்,  பாப்பிரெட்டிபட்டி வட்டார இணைச்செயலாளருமான திரு.நாகேந்திரன் அவர்கள் மாவட்ட துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அவர்களின் பணி சிறக்க கூட்டத்தில் வாழ்த்து  தெரிவிக்கப்பட்டது.

சங்கத்தின் மாவட்ட செயலாளராக இருந்து 
பதவி உயர்வில் தலைமையாசிரியராக சென்றுள்ள திரு.அப்துல் அஜீஸ் அவர்களுக்கும்,

மாவட்ட பொருளாளராக இருந்து
தலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்றுள்ள திரு.வையாபுரி அவர்களுக்கும்,

மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்து
தலைமையாசிரியராக பதவி உயர்வில் சென்றுள்ள திரு.சம்பத்குமார் அவர்களுக்கும்,  அவர்களின் சங்க பணிக்காக பாராட்டப்பட்டார்கள்.

அதுசமயம் மேலும்    மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்களும்  கலந்து கொண்டார்கள். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த
நன்றி!   நன்றி!!  நன்றி!!

ஜி.ஆரோக்கியம்
மாவட்ட. செய்தி தொடர்பாளர்
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA)
தருமபுரி மாவட்டம்.

தமழ்நாடு அரசு SC/ST பணியாளர்கள் தங்களின் குழந்தைகளுக்கு POST MATRIC கல்வி உதவிதொகைக்கு விண்ணப்பிக்க பெறும் வருமான சான்றில் DA & HRA சேர்க்க தேவையில்லை

தமழ்நாடு அரசு SC/ST பணியாளர்கள் தங்களின் குழந்தைகளுக்கு POST MATRIC கல்வி உதவிதொகைக்கு விண்ணப்பிக்க பெறும் வருமான சான்றில் DA & HRA சேர்க்க தேவையில்லை

2 October 2016

கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் புற்றுநோய் பணியார்களுக்கு தேர்தல் பணியிலிரூந்து விலக்கு

கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் பெண்கள் மற்றும் புற்றுநோய் பணியார்களுக்கு  தேர்தல் பணியிலிருந்து விலக்கு

26 September 2016

இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வரும் 1,620 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முடிவு: பள்ளி கல்வி இயக்குனர் தகவல்

1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன’’ என்று பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பரிசளிப்பு விழா, நாகர்கோவிலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், தமிழக பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது:- மாணவர்களின் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் சக்தி, ஆசிரியர்களுக்குத்தான் உண்டு. பள்ளியில் கணிதம் பாடத்தில் 200க்கு 200 எடுக்கும் மாணவர்கள் கூட, அண்ணா பல்கலைக்கழக தேர்வில் 50 மதிப்ெபண்கள் எடுப்பதற்கு, திணறும் நிலை உள்ளது. நமது வகுப்பறைகளின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும். எம்.பி.பி.எஸ்., பி.இ. மட்டும்தான் படிப்பு என்பதை மாற்ற வேண்டும். ஏராளமான உயர்கல்வி படிப்புகள் உள்ளன. எந்தெந்த படிப்புகளுக்கு என்னென்ன வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்பதை மாணவர்களுக்கு விளக்க வேண்டும். தமிழகம், கல்வியில் வேகமாக முன்னேறி வருகிறது. 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. 1000-த்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளன. தற்போது, 1620 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு இன்னும் 10 அல்லது 15 நாட்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் 1,536 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய ஆன்ட்ராய்டு செயலியையும் கண்ணப்பன் வெளியிட்டார்.

http://www.Dinakaran.com/News_detail.asp?Nid=247978

via http://j.mp/tamil_news

1 September 2016

*2015-16 வருடத்திற்க்கானCPS கணக்கீட்டு தாள் வெளியீடு


*2015-16 வருடத்திற்க்கான
கணக்கீட்டு தாள் வெளியீடு
CPS ACCOUNT SLIP
click here to view your CPS Statement
http://cps.tn.gov.in/public/CPS STATEMENT 2015-16

16 August 2016

ERODE DISTRICT PG Vacancies

PG VACANCIES IN ERODE  DISTRICT

TNHSPGTA Erode

CHEMISTRY
--------------------
Sivagiri Girls
Puliampatti Girls
MPL Girls Gobi
Perundurai Girls
GTS Erode

PHYSICS
-----------------
Karungalpalayam Girls
GTS Erode
Kavindapadi Boys

BIOLOGY
A.Puthupalayam
Kanchikovil
Anumanpalli
D.G.PUDUR

BOTANY
Anumanpalli
Guruvareddiyur

COMMERCE
-------------------
BHAVANI Girls

TAMIL
-----------
Sathyamangalam Girls

ENGLISH
---------------
Kumalankuttai

Visit www.tnhspgtadharmapuri.blogspot.in for other district vacancies

19 July 2016

| 19.7.2016 >> PGT POST 1600 | மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதலாக 1600 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அரசிடம் அனுமதி கோரி இருப்பதாக பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்(TNHSPGTA)  வழக்கின் காராணமாக, மாணாக்கர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூடுதலாக 1600 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அரசிடம் அனுமதி கோரி இருப்பதாக  பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார்

18 July 2016

Transfer Counselling Govt Order 2016

Transfer Counselling Govt Order

https://www.dropbox.com/s/i7tjxnhiwl3wubf/Transfer%20GO%2C%20Director%20Proceedings%20%2C%20Transfer%20Appilcation.pdf?dl=0

16 July 2016

பள்ளிக்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு: ஆகஸ்டு 3 முதல் செப். 6 வரை நடைபெறவுள்ளது


மாறுதல் விண்ணப்பங்கள் ஜுலை 19 முதல் 28 வரை விண்ணப்பிக்கலாம்

பள்ளிக்கல்வித்துறை

6.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு 

7.8.16 - மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு

13.8.16 - உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாறுதல்

20.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)

21.8.16 - முதுகலை ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

22.8.16 - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு

23.08.16 - உடற்கல்வி, இடை நிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)

24.08.16 - உடற்கல்வி, இடை நிலை, தையல் ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

27.8.16 முதல் 29.8.16 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல்

03.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டத்திற்குள்)

04.9.16 - பட்டதாரி ஆசிரியர் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்)

06.9.16 - பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு

11 July 2016

09.07.2016 ( சனிக்கிழமை) அன்று , புதுக்கோட்டை அருள்மிகு.பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் (TNHSPGTA) மாநிலத்தலைவர் வே.மணிவாசகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

🌺🌺🌺🌺🌺🌺🌺
தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம்.
TNHSPGTA.
மாநிலப் பொதுக்கூட்டம்.
புதுக்கோட்டை. 09:07:16 சனிக்கிழமை.

09.07.2016 ( சனிக்கிழமை) அன்று , புதுக்கோட்டை அருள்மிகு.பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்
(TNHSPGTA) மாநிலத்தலைவர் வே.மணிவாசகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

மாநிலப் பொதுக்குழுத் தீர்மானங்கள்
--------------------------------
----------------------------
👉🏾தீர்மானம்: 1. தமிழக முதல்வருக்கு வாழ்த்து. . .

தமிழகத்தின் முதல்வராக 6-வது முறை பதவியேற்றிருக்கும்,மாண்புமிகு. முதல்வர்.செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கு இம்மாநிலப் பொதுக்குழு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழகத்தின் புதிய அமைச்சர் பெருமக்கள் அனைவருக்கும் இம்மாநிலப் பொதுக்குழு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு. திரு.பா.பெஞ்சமின் அவர்களுக்கு இம்மாநிலப் பொதுக்குழு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 2. பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்தல். .

2-(1). கடந்த 2015-2016 ஆம் கல்வியாண்டில், உயர்நிலை பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படவில்லை. 2016-2017ஆம் கல்வியாண்டில் (நடப்புக் கல்வியாண்டில்)     கடந்த ஆண்டுக்கும் சேர்த்து சுமார் 200உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்திட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

2-(2). கல்வி உரிமையியல் சட்டப்படி(RTE Act) ஆசிரியர் மாணவர்கள் விகிதம் 1 : 40 என்ற அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு/அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளிலும் முதுகலை ஆசிரியர் பணியிட எண்ணிக்கையினை அதிகரித்திட வேண்டும் எனவும்

2-(3). 1989 முதல் 2011 வரை தமிழகத்தில் உயர்நிலைப் பள்ளிகளாக இருந்து மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம்  உயர்த்தப்பட்ட அனைத்து  மேல்நிலைப் பள்ளிகளுக்கும்  தமிழ்  உட்பட அனைத்து  கலைப் பாடங்களுக்கும் புதிய பணியிடங்கள் வழங்கிட வேண்டும் எனவும்

2-(4). மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்கள் இதுநாள் வரை 3181முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வழங்கியமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் தேவை என்கின்ற அடிப்படையில் மேலும் 5000முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கி, நியமித்திட வேண்டும் எனவும் தமிழக முதல்வர் அவர்களை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

2-(5). அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள தமிழ்,ஆங்கில மொழிப் பாட ஆசிரியர்கள் சுமார் 500-700 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலையில் மிகுந்த சிரமமான சூழலில் பாடம் போதிக்கின்றனர்.  அனைத்து மாணவர்களுக்கும்  பருவத்  தேர்வு கூட  நடத்திட  சாத்தியமில்லாத சூழ்நிலையே நிலவுகிறது. எனவே சுகூநு ஹஉவ-ன்படி மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப கூடுதலாக மொழி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும் எனவும் இம் மாநிலப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
👉
தீர்மானம்: 3.    பணிமாறுதல் கலந்தாய்வு சார்ந்தவை. . .

3-(1) பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டபின்,மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வுக்குப்  பின்பு, மேல்நிலைப்  பள்ளித் தலைமையாசிரியர்  பதவி  உயர்வு கலந்தாய்வு  நடத்திடவும், பின்பு முதுகலை  ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல்  கலந்தாய்வு, ஒளிவு  மறைவற்ற  முறையிலும் வெளிப்படைத் தன்மையுடனும் நடத்திட வேண்டும் எனவும்,

3-(2) தற்போதுள்ள ஆன்லைன் பொதுமாறுதல் கலந்தாய்வு முறையில் சில குறைபாடுகள் உள்ளன. உதாரணமாக முன்னுரிமை எண்.10 உள்ளவரின் இடம் காலி ஏற்படும் போது,தற்போது உள்ள முறைப்படி 11ஆம் நபருக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது, ஆனால் உண்மையான முன்னுரிமை முதல் நபருக்கே மீண்டும் வழங்கப்பட வேண்டும். இம்மாதிரியான குறைபாடுகள் களையப்பட்டு முறையான கலந்தாய்வு நடத்திட வேண்டும் எனவும்

3-(3). பொது மாறுதல் கலந்தாய்வில் உயிரியல் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடம் ஏற்படும் போது, அந்த இடத்திற்கு தாவரவியல் மற்றும் விலங்கியல் பாட ஆசிரியர்கள் யார் விரும்பினாலும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிட வேண்டும் எனவும் இம்மாநில பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 4.    IIT, IIS, . மற்றும்NEET – போன்ற போட்டித் தேர்வுகளை ஒட்டிய புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு   கொண்டு வர வேண்டுதல். . .
👉
4-(1).     IIT, IIS, . மற்றும் NEET – போன்ற  போட்டித் தேர்வுகள் கட்டாயம் என்ற நிலையில், தமிழக மேல்நிலைக் கல்விக்கான பாடத்திட்டம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். கடந்த 12 ஆண்டுகளாக ஒரே பாடத்திட்டம் எவ்வித மாற்றமுமின்றி மாற்றியமைக்கப்படாமல் அப்படியே உள்ளது.     தேசியக் கல்வி ஆராய்ச்சி  மற்றும்  பயிற்சி நிறுவனத்தின் (NCERT)    பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் அனைத்து மாநிலங்களும் தமது பாடத்திட்டத்தினை முறைப்படுத்திக் கொள்கின்றன. மற்ற மாநிலங்களில் இப்பாடத்திட்டம் அப்படியே அந்தந்த மாநில மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ், சமூக அறிவியல் பாடங்கள் தவிர அனைத்துப் பாடங்களுக்கும் NCERT-ல் உள்ள படி ஆங்கில வழியில் உள்ள பாடத்திட்டத்தினை அப்படியே தமிழில் மொழி பெயர்த்து தமிழக மாணவர்களுக்கு அளித்திட வேண்டும் எனவும் இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

👉
4-(2). அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறவும்,கல்வித் திறனை மேம்படுத்திடவும், 80ரூ க்கு மேல்    அறிதல், புரிந்து கொள்ளுதல், திறன் வெளிப்படுத்துதல்,நடைமுறைக்கேற்ப பயன்படுத்துதல் என்ற முறையில் வினாத்தாட்கள் அமைய வேண்டும் எனவும், மதிப்பீட்டு முறையும் மாற்றப்பட வேண்டும் எனவும் இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

👉
4-(3). மேல்நிலைக் கல்வியில் உள்ள +1, +2 வகுப்பிற்கு பருவமுறைத் தேர்வுகள் (SemesterSystem) கொண்டு வரவும், அதாவது இரண்டு வருடத்திற்கும் சேர்த்து 4பருவங்களாகப் பிரித்து Semesterமுறையில் தேர்வுகள் அமைத்திட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 5.      7-வது   ஊதியக்குழு   சார்ந்தவை. . .

நடுவண் அரசின், 7-வது ஊதியக் குழுவில், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.18,150/-என்பதை அடிப்படையாகக் கொண்டு ஊதியம் நிர்ணயம் செய்துள்ளனர். இதனையே அடிப்படையாக வைத்துக் கொண்டு தமிழகத்தில் உள்ள முதுகலை ஆசிரியர்களுக்கும் ஊதிய விகிதத்தினை அளித்திட வேண்டும்

தமிழகத்தில் 01.06.2009 முதல் முதுகலை ஆசிரியர்கள் ரூ.14,100/-என்ற குறைவான ஊதிய விகிதத்தினையே  இன்று  வரை பெற்று  வருகின்றனர்.  இதனை மாற்றி  அமைத்து,  எதிர்வரும் ஊதியக்குழுவின் பரிந்துரையில் ரூ.18,150/- என்பதை அடிப்படையாக வைத்து ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டுமாய் இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 6 .    மேல்நிலைக் கல்விக்கென தனி இயக்குநரகம் வேண்டுதல். . .

மேல்நிலைக் கல்வியில் உள்ள சுமார் 3400 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ள நிலையில் தனி இயக்குநரகம் அமைத்திட வேண்டும் அல்லது மேல்நிலைக் கல்விக்கென தனி இயக்குநர் பணியிடமாவது ஏற்படுத்தி மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்களின் பணி சார்பான தேவைகளை உடனடியாக தீர்ப்பதற்கு ஏதுவான சூழ்நிலையினை ஏற்படுத்திட வேண்டும் எனவும் இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 7.   மேல்நிலைக் கல்விக்கான ஒரு நபர் குழு அறிக்கை வெளியிட வேண்டுதல். .

மேல்நிலைக் கல்வியில் உள்ள இடர்பாடுகளை களையும் விதமாக அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவான திரு. ஜெகந்நாதன் குழு,திரு.கருணாகரன் குழு அறிக்கைகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனை உடனடியாக வெளியிட்டு முதுகலை ஆசிரியர்களின் துயர் துடைத்திட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 8.    தன்பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் நீக்கிட வேண்டுதல். . .

மாண்புமிகு.தமிழக  முதல்வர் அவர்கள்  2011-ஆம்  ஆண்டு ஆட்சியில்  அமரும்  போதே ஊஞளு திட்டம் முற்றிலும் அகற்றப்பட்டு, பழைய ஓய்வூதியத்திட்டமே பின்பற்றப்படும் என கூறினார்கள். ஆனால் நடைமுறைக்கு வரவில்லை.  6-வது  முறையாக பதவியேற்றிருக்கும்  தமிழக முதல்வர்  அவர்கள் தன்பங்களிப்பு ஓய்வூதியத்  திட்டத்தினை நீக்குவது  பற்றி  ஆராய  ஒரு குழுவினை  அமைத்துள்ளார்கள். காலம் தாழ்த்தாமல் விரைவில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே நடைமுறைப்படுத்திட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 9. 2004-2006 -தொகுப்பூதியக் காலத்தை முறையான பணிக்காலமாக்கிட வேண்டுதல். . .

2004 முதல் 2006 முடிய உள்ள காலங்களில் தொகுப்பூதியத்தில்,பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறை செய்து அக்காலங்களுக்குரிய நிலுவை ஊதியத்தினை வழங்கிட வேண்டும் எனவும் இம்மாநிலப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 10. உதவித் தலைமையாசிரியர் படி வழங்கிட வேண்டுதல். ..

மேல்நிலைப்  பள்ளிகளில் உதவித் தலைமையாசிரியராகப் பணியாற்றுபவர்களுக்கு படியாக ரூ.1000/- ஒவ்வெரரு மாதமும் வழங்கிட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 11.    இடஒதுக்கீடு முறையில் மாணவர்களை சேர்த்தலைக் கண்டித்தல். .

அரசுப் பள்ளிகளில் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என எவ்விதமான அரசாணையும் இல்லை. ஆனால் பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் இது பற்றிக் கூறப்பட்டுள்ளது. பொதுவாக அரசுப் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் சேர்க்கை வழங்கப்படும் நிலை உள்ளது. யாருக்கும் பள்ளியில் சேர்க்கை இல்லை எனக் கூறும் நிலையே இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை. இந்நிலையில் இச்செயல்முறையினைக் காரணம் காட்டி பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவதை இம்மாநிலப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

👉
தீர்மானம்: 12. அனைத்து துறைப் பள்ளிகளையும் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைத்திட வேண்டுதல். . .

ஆதிதிராவிடர் நலத்துறைப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், வனத்துறைப் பள்ளிகள்,அறநிலையத்துறைப்  பள்ளிகள், மாநகராட்சிப்  பள்ளிகள்,  இது போன்ற  அனைத்துப்  பள்ளிகளும் அரசின் நேரடி நிதியிலிருந்தே நடத்தப்படுகின்றன. இந்நிலையில் மேற்கண்ட பள்ளிகள் அனைத்தையும் அரசுப் பள்ளிகளுடன் இணைத்து   பள்ளிக் கல்வித்துறை என்ற ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

👉
தீர்மானம்: 13.   ஒரே நிலையில் 30ஆண்டுகள் பணிக்காலம் - 6ரூ ஊதிய உயர்வு வேண்டுதல். .

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் சிறுபான்மைப் பள்ளிகளில்    30 ஆண்டுகளாகப் பதவி உயர்வு இல்லாமல் ஒரே நிலையில்     பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலைக்கு6ரூ, சிறப்பு நிலைக்கு 6ரூ ஊதிய உயர்வு வழங்குவது போல் 30ஆண்டுகள் எவ்வித பதவி உயர்வும் இல்லாமல் பணி முடித்தவருக்கு6ரூ ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும் என இம்மாநிலப் பொதுக்குழு தமிழக அரசினைக் கேட்டுக் கொள்கிறது.

  👉 தீர்மானம்: 14. தேர்வுத் துறை சார்ந்த கோரிக்கைகள். . .

14-(1). மேல்நிலைக் கல்வியில்,ஒருங்கிணைந்த விடைத்தாள் திருத்தும் மையங்கள் கல்வி மாவட்டம் தோறும் அமைத்திட வேண்டும் எனவும்

👉
14-(2).  மேல்நிலைத்  தேர்வு விடைத்தாள்  ஒன்றுக்கு உழைப்பூதியமாக  ரூ.20/- வழங்கிட  வேண்டும் எனவும்

👉14-(3). மாணவர்கள் எதிர்கால நலத்தினைக் கருத்தில் கொண்டு,முதுகலை ஆசிரியர்களுக்கு நாள்

ஒன்றுக்கு மொழிப்பாடத்திற்கு (காலை 10, மாலை 10) 20தாள்களும், மற்ற பாடங்களுக்கு (காலை 8, மாலை 8) 16 தாள்களும் விடைத்தாள் திருத்த வழங்கிட வேண்டும் எனவும்

👉 14- (4).  தேர்வுக்  கால  பணியான, துறை  அலுவலர்,  கூடுதல்  துறை அலுவலர்,  வழித்தட  அலுவலர்,அறைக் கண்காணிப்பாளர்,பறக்கும் படை உறுப்பினர்,வினாத்தாள் கட்டுக் காப்பாளர் போன்ற அனைத்து பணிகளுக்குமான உழைப்பூதியத்தினை  தற்போது இருப்பதை விட    3 மடங்கு உயர்த்தி  வழங்கிட வேண்டும்