புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

25 November 2016

பாஸ்போர்ட் பெற நோட்டரி அபிடவிட் தேவையில்லை: மண்டல அலுவலர்!!

''மூன்றாண்டுகளுக்கு மேல் வெளிநாடுகளில் தங்கியிருந்த நாட்களை வைத்து இமிக்ரேஷன் சோதனை தேவையில்லாத (நான் இ.சி.ஆர்.,) பாஸ்போர்ட் பெற நோட்டரி அபிடவிட் தேவையில்லை,'' என, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் மணீஸ்வரராஜா
தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
நோட்டரி அபிடவிட் பெற விண்ணப்பதாரர்கள் தனி நபர்களை நம்பி அதிக பணம் செலவிடுகின்றனர்.
விண்ணப்பதாரர்கள் வெளிநாடு
செல்லாமல் சென்றதாக தனி நபர்கள் தவறான அபிடவிட் தயாரித்து பணம் பறிக்கின்றனர். இதை தடுக்க மூன்றாண்டுகளுக்கு மேல்
வெளிநாட்டில் தங்கியிருந்த நாட்களை வைத்து இமிக்ரேஷன் சோதனை தேவையில்லாத பாஸ்போர்ட் பெற அபிடவிட் சமர்ப்பிக்க நவ., 28 முதல் தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்கும் போது அரசு பொது சேவை மையத்தில் பதிவு செய்து குறிப்பிடும் நாளில் பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு செல்லலாம். சேவை மையத்தில் முன் விசாரணை கவுன்டரில் இதற்காக தனி விண்ணப்பம் வழங்கப்படும்.அதில் விண்ணப்பதாரர்கள் தங்கியிருந்த நாட்களை பதிவு செய்தால் போதும். அதை 'பி' கவுன்டரிலுள்ள அலுவலர்கள் சரிபார்த்து பாஸ்போர்ட் பெற சிபாரிசு செய்வர்.வெளிநாடுகளில் பணி பெற விரும்புவோர் அரசு பதிவு பெற்ற ஆள் சேர்ப்பு முகவர் அல்லது வெளிநாட்டு நிறுவனம் மூலம் செல்லலாம். இமிக்ரேஷன் சோதனை தேவைப்படும் பாஸ்போர்ட் வைத்திருப்போர் 17 நாடுகளுக்கு செல்லும் போது மட்டும் அனுமதி பெற்று செல்ல வேண்டும்.பொதுமக்கள் பாஸ்போர்ட் பெற தவறான முகவர்கள் வழங்கும் ஆவணங்களை சமர்ப்பித்தால் அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்படும். இந்த தவறு செய்பவர்களுக்கு பாஸ்போர்ட் சட்டம் 1967 பிரிவு 12ன் படி இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். பாஸ்போர்ட் நிலை அறிய வாட்ஸ் ஆப் எண்ணில் 88701 31225, கட்டணமில்லா டெலிபோன் 1800 258 1800ல், புகார் தெரிவிக்க 0452-252 1205லிலும் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்தார்.

No comments: