புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!
Showing posts with label Madurai General Body meeting(TNHSPGTA). Show all posts
Showing posts with label Madurai General Body meeting(TNHSPGTA). Show all posts

26 April 2015

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம்மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் தலைமையில் மதுரையில் 25.04.2015 அன்று சிறப்பாக நடைபெற்றது

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் - மதுரை

 தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் மதுரை - சிவகங்கை ரோடு, அரசனுர் பாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரியில் 25.04.2015  அன்று மாநிலத் தலைவர் வே.மணிவாசகன் தலைமையிலும் மாநிலப் பொதுச் செயலாளர் இரா.பிரபாகரன், மாநிலப்  பொருளாளர் ஆ.கிருஷ்ணன், மாநில அமைப்புச் செயலாளர் இரா.புஷ்பராஜ், மாநில தலைமையிடச் செயலாளர் பொ.பாலசுப்பிரமணியன், மாநில மகளிர் அணிச் செயலாளர் க.முத்துக்குமாரி மற்றும் மதுரை மாவட்டச் செயலாளர் சி.இரவிச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. மதுரை மாவட்டத் தலைவர் பெ.சரவணமுருகன் வரவேற்புரையாற்றினார் மாவட்டப் பொருளாளர் வினோத் நன்றி கூறினார்.
தருமபுரி மாவட்டத்தின் சார்பில் மாவட்ட தலைவர் E.P.தங்கவேல் , மாநில செய்தி தொடர்பாளர் R.செல்வம், மாநில துணைத்தலைவர் சேகர், மண்டல செயலர் T.செல்வம் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆரோக்கியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
  • ஆறாவது ஊதியக்குழுவினால் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை நீக்கி நடுவண் அரசுக்கு இணையான ஊதியத்தினை வழங்கிட வேண்டும்
  •    1987-ல் ஒப்பந்த நியமன முதுகலை ஆசிரியர்களையும் 2004-முதல் 2006-வரை  தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களையும் அவர்கள் பணியேற்ற நாள் முதல்  பணிவரன்முறை செய்ய வேண்டும்
  • தன்பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம்  முறையினை இரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்
  •     வரும் கல்வி ஆண்டு முதல் +1 மற்றும் +2 வகுப்புகளுக்கு நான்கு  பருவத் தேர்வு  நடைமுறையை கொண்டு வர வேண்டும்.
  •  12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளின் கடுமையைக் கருதி தேர்வுப் பணிகளுக்கான உழைப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தினை பின்வருமாறு உயர்த்தித் தர வேண்டும்
  •     நலத்துறைப் பள்ளிகள் மற்றும் இதர துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன்  இணைக்க வேண்டும்
  • கடந்த ஆண்டு அனைத்து இடங்களும் மறைக்கப்பட்டு பணியிட மாறுதல் நடத்தப்பட்டது. வரும் கல்வியாண்டில் ஒளிவு மறைவற்ற பணியிட மாறுதல் நடத்தப்பட வேண்டும்
மேற்கண்ட தீர்மானங்கள் அனைத்தும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.