புதிய மேல்நிலைக்குரல் ஜனவரி 2017 முதல் வருகிறது அனைத்து மாவட்ட பொறுப்பாளர்களும் தங்கள் மாவட்ட பொதுக்குழு கூட்டம், ஆர்ப்பாட்டம் சார்பான செய்திகளை புதிய மேல்நிலைக்குரலுக்கு அனுப்பி வைக்கவும் ***** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். **!!!!!!!!!!! உறுப்பினர்களும் தங்கள் படைப்புக்களை அனுப்பி வைக்கலாம். படைப்புக்களை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி email address: muralidharan151061@yahoo.com தொடர்புக்கு திரு.S.முரளிதரன், அலைபேசி எண் :9442421721,8012550503 ****** அனைத்து முதுகலை ஆசிரியர்களும் மேனிலைக்குரலின் சந்தாதாரர்கள் ஆவோம். !!!!!!!!!!!

24 June 2016

TRB 2006-07 PG Teachers Regularaisation order

TNHSPGTA Case details & present status

2006-07 TRB Regularaisation order தனியாக தேவையில்லை

மேல்நிலைக்கல்வி ஆரம்பிக்கப்பட்ட வரலாறும் தங்களுக்கு தெரியுமா? இந்த மேல்நிலைப் பணித்தொகுதி என்னென்ன பிரச்சனைகளை சந்தித்து வருகிறது என தங்களுக்கு தெரியுமா? மாநில சட்டத்ததுறை செயலாாளர், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் (TNHSPGTA)

நேரடி நியமனம் பெற்ற முதுகலையாசிரிய நண்பர்களே, வணக்கம்.

பள்ளிக்கல்வித்துறையில் பெரிய வகுப்புகளை (11,12 ) கையாளும் ஆசிரியர்கள் நாம். ஆனால் நமது ஊதியம், பதவி உயர்வு சார்ந்த பிரச்சனைகளையும், இந்த மேல்நிலைக்கல்வி ஆரம்பிக்கப்பட்ட வரலாறும் தங்களுக்கு தெரியுமா? இந்த மேல்நிலைப் பணித்தொகுதி என்னென்ன பிரச்சனைகளை சந்தித்து வருகிறது என தங்களுக்கு தெரியுமா? அதை தங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.

     1966 ம் ஆண்டு கோத்தாரி கல்விக்குழுவின் பரிந்துரையை இந்திய பாராளுமன்றம் ஏற்றுக்கொண்டதன் பேரில் தமிழகம் அரசு 1.7.1978 அன்று தமிழகத்தில் 10+2+3 முறையை அமல்படுத்தியது. அன்று சுமார் 750 பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது.  அதனால் கல்லூரிக்கு செல்ல முடியாத நிறைய கிராமப்புற மாணவர்கள் மேல்நிலைக் கல்வி பெறும் நிலை ஏற்பட்டது. முதுகலையாசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.675 நிர்ணயிக்கப்பட்டது. கல்லூரி ஆசிரியர்களை விட 25 ரூபாய் மட்டுமே குறைவு என்பதாலும், தங்கள் சொந்த ஊருக்கு அருகிலேயே பணி என்பதாலும் மேல்நிலைக் கல்வியில் பல முதுகலையாசிரியர்கள் ஆர்வத்துடன் பணியில் சேர்ந்தனர். கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதைப் போல ஆர்வத்துடன் கற்பித்தனர்.

     இந்நிலையில் நமது பணித்தொகுதிக்கான பணிவிதிகள், தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி விதிகள் என்ற பெயரில் அரசாணை எண் 720, நாள்.28.04.1981 ன் படி வெளியிடப்பட்டது. மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு 10 ஆண்டு ஆசிரியப்பணி அனுபவம் நிர்ணயிக்கப்பட்டது. பணியில் சேரும் போது எந்த முதுகலையாசிரியர் 10 ஆண்டு ஆசிரியப் பணியை முடித்திருப்பார்? அதனால் 10 ஆண்டு ஆசிரியப் பணி முடித்த பட்டதாரி ஆசிரியருக்கே மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணி வழங்கப்பட்டது. 1988 ல் நமது முதுகலையாசிரியர்கள் 10 ஆண்டு பணியை முடித்திருந்தனர். பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப்பின் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியில் 7 காலிப்பணியிடங்களில்      2 : 5 என்ற விகிதத்தில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலையாசிரியர்களை நியமிக்கலாம் என அரசாணை எண் 1620. நாள் 18.10.1988 ன் படி மேற்காண் அரசாணை 720ன் விதி 2( b)(1) ல் திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் பயிற்சி வழங்கப்பட்டு முதுகலையாசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.  அவர்களும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் பங்கு கேட்க, மேற்காண் விகிதம் 2 : 5: 2 என மாற்றப்பட்டது. 9 தலைமையாசிரியர் பணியிடங்களில் 2 பணியிடங்கள் சான்றிதழ் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. அதாவது முதுகலைப்பட்டம் பெற்றவர் ஆசிரியராகவும் பட்டம் மட்டும் பெற்றவர் தலைமையாசிரியராகவும் நியமிக்கப்பட்டனர். இதற்கான புண்ணியத்தை அரசாணை 542, நாள் 29.06.1994 தேடிக்கொண்டது. இதில் ஒரு பத்து வருடம் கழிந்த்து. சான்றிதழ் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் யாரும் இல்லாததால் மீண்டும் விகிதாச்சாரம் 25 என மாற்றப்பட்டது.

இன்று பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்  பள்ளிக்கல்வி இயக்குனராக கூட ஆக முடியும். ஆனால் முதுகலைப்பட்டம் பெற்றவர் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆவதற்குள் அவரது பணிக்காலம் முடிந்து விடும். அரசு நமக்கு வகுத்து தநதிருக்கும் விதிகள் அப்படி.

ஒரு பள்ளியில் முதுகலையாசிரியர் உதவித்தலைமையாசிரியராக இருப்பார். அவரிடம் பணிபுரிந்த பட்டதாரி ஆசிரியர் சில வருடங்கள் கழித்து மாவட்டக்கல்வி அலுவலராகவும், முதன்மைக்கல்வி அலுவலராகவும் பதவி உயர்வு பெற்றிருப்பார்.

இன்றுவரை அது தொடர்கிறது.  இது பதவி உயர்வு சார்நத பிரச்சனைகள்.

     சரி ஊதிய விஷயத்திலாவது அரசு நடுநிலையாக நடந்துகொண்டதா என்றால் அதுவும் இல்லை. 1978 ல் நமக்கும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் இருந்த வித்தியாசம் வெறும் ரூபாய்.25 மட்டும். அதாவது அடிப்படை ஊதியத்தில் 3.5 சதம் மட்டுமே வித்தியாசம் . இன்று கல்லூரி ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.21,000. நமது அடிப்படை ஊதியம் ரூ.14100. ஏறத்தாழ 50 சதம் அதிகம். சரி கல்லூரி ஆசிரியரை விடுங்கள். நமது உடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியரின் ஊதியம் எவ்வளவு? அடிப்படை ஊதியம் ரூ.13900. முதுகலைப்பட்டத்திற்கான ஊக்க ஊதியத்தை சேர்த்தால்  .ரூ.14740. நம்மை விட ரூ.640 அடிப்படை ஊதியத்தில் அதிகம். அகவிலைப்படியுடன் சேர்த்து 1440ரூபாய் பட்டதாரி ஆசிரியர் கூடுதலாகப் பெறும் நிலை இந்தியாவில் எங்கும் இருக்காது...

இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் நமது முதுகலையாசிரியர் பணித்தொகுதிக்கென்றே உள்ளது. பதவி உயர்வு சார்ந்து பல வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது. ஊதிய முரண்பாடுகள் சார்ந்து விரைவில் வழக்கு தொடுக்க உள்ளோம். 

போராடாமல் எதையும் வென்றதில்லை என்பதை மனதில் நிறுத்தி சிறப்பாக செயலாற்றுங்கள். உங்களுக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம் என்றும் துணை நிற்கும்.

தொடர்ந்து பேசுவோம்..

தங்கள் பணி சாரந்த பிரச்சனைகள், அரசாணைகள், தெளிவுரைகளுக்கு தொடர்பு கொள்க,

இரா.சீனிவாசன்,

மாநில சட்டத்ததுறை செயலாாளர்,

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம்,

மின்னஞ்சல் srinivasantheja@gmail.com

செல்பேசி 9942618399

5 June 2016

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக(TNHSPGTA) மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன் அவர்களின் செய்தி நாள்: 05.06.16

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக(TNHSPGTA) மாநில தலைவர் திரு.வே.மணிவாசகன் அவர்களின் செய்தி

நாள்: 05.06.16
------------------------------------------------------------------------------------------------------

நடுவண் அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கு முதுகலை ஆசிரியர்கள் தான் பாடம் எடுக்கிறார்கள். இங்கு தான் நிலைமை தலைகீழ். அங்கு பதவி உயர்வு ஒரே நேர்க்கோடு. எங்கு வேண்டுமானாலும் போகலாம் பதவி உயர்வு பெறலாம் என்ற நிலைமை இல்லை. அங்கு 01.6.09 முதல் முதுகலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 18,150/-  இங்கு 14,100/- ஊதியம், பதவி உயர்வு மற்றும் பணிச்சுமை ஆகிய அனைத்திலும் நாம் மிகவும் பின்னே. அதற்கு ஏற்றாற் போல் முதுகலை ஆசிரியர்களின் சங்க உணர்வும் பின்னுக்குப் பின்னே. அனைத்தையும் நாம் சாதிக்கலாம். எப்போது நம்மிடம் இருக்கும் போராட்ட ஆயுதத்தை சரியாகப் பயன்படுத்தும் போது. விடைத்தாள் திருத்தும் பணி தான் மிகப் பெரிய மிகச் சிறந்த ஆயுதம். அதனைப் பயன்படுத்த தலைவர் மூர்த்தி காலத்திலியே பயன்படுத்தி தோல்வி தான் கண்டோம். அப்போது தான் நமது கோயபல்ஸ்கள் தீவிரமாக அரசுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். அதனால் தான் நான் அந்த ஆயுதத்தை கையில் எடுப்பதில்லை. நீங்கள் அனைவரும் அதிகாரிகளுக்கும், அதிகாரத்திற்கும் பயந்து வேக வேகமாக திருத்துவீர்கள். தலைவர் காலத்தில் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு அறிவித்து மொத்தம் 39 பேர் மட்டுமே சிறைக்கு சென்ற காலம் உண்டு. நமது முதுகலை ஆசிரியர்கள் பின்புறமாக சுவர் ஏறி குதித்துச் சென்று விடைத்தாள் திருத்தினார்கள். அப்போது கோயபல்ஸ் அமைப்பு அரசுக்கு ஆதரவாக அறிக்கை விட்டு விடைத்தாள் திருத்தியது. இன்று கூட நீங்கள் பார்க்கலாமே. நமது மாவட்ட அமைப்புகள் மு.க. அலுவலரைக் கண்டித்து ஏதாவது நடவடிக்கையில் இறங்கினால் உடனே மு.க.அலுவலருக்கு ஆதரவாக செயல்படுவார்கள். எவன் உண்மையானவன்.எவன் நமக்காக உழைக்கின்றவன் _ எது முதுகலை ஆசிரியர்களின் நலனில் அக்கரை உள்ள சங்கம் எனக் கண்டறிந்து செயல்படாத வரை எந்த பெரிய மாற்றுமும் மேனிலைக் கல்வியில் நடக்காது... நடக்க வே நடக்காது... இந்த அமைப்பின் பொறுபாளர் என் சாதிக்காரன், என்னோடு படித்தவன், எங்கள் வீட்டுக்காரருக்கு நண்பர் என பல காரணிகளைக் கொண்டு தவறான இயக்கத்தோடு தொடர்பு இருந்தால் என்றைக்கு நாம் மேனிலைக் கல்வியை உயர்த்துவது... சிந்தியுங்கள்... தெளிவு பெறுங்கள்...

-----------------------------------------------
வே.மணிவாசகன்,
மாநில தலைவர்,
TNHSPGTA

31 March 2016

2012-13ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால்  தேர்ந்தெடுக்கப்பட்டு 19.2.14 & 21.02.14 ஆகிய தேதிகளில் பணி நியமனம் பெற்றவர்களுக்கு திருத்திய பணிவரன்முறை ஆணை

26 March 2016

தேர்வுநிலைக்குரிய விண்ணப்ப படிவம். நமது அமைப்பின் இணையத்தில் உள்ளது தரவிறக்கம் செய்துகொள்ளவும்

01-06-2006 காலமுறை ஊதியம் பெற்ற ஆசிரியர்களே உங்கள் கவனத்திற்கு...
01-06-2016 அன்று தேர்வுநிலை பெற உள்ளதால் விண்ணப்பங்கள் CEO அலுவலகத்தில் அளிக்க தயார்செய்வீர்!

1. உங்கள் வேண்டுதல் கடிதம்.மற்றும் தலைமை ஆசிரியர் செயல்முறைகள் கடிதம்(Covering Letter)
2.தேர்வுநிலைக்குரிய விண்ணப்ப படிவம்.
3.பணி நியமன ஆணை.
4.பணிவரன்முறை ஆணை.
5.தகுதிகான்பருவம்   ஆணை.
6. 10வகுப்பு  மற்றும் +2 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் உண்மை தன்மை சான்று
7 . பட்டச் சான்றிதழ்
UG (Convocation only), PG (Convocation only)
& BEd (Convocation only) . மேற்கூறிய அனைத்து சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்றுகள்.
(PG ASST).மதிப்பெண் பட்டியல் இணைக்க தேவை இல்லை .
8. S. R Book  (Service Record) up to date entry.
9. விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின்  நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
மற்றும்பார்வைக்கு அசல்  (original ) சான்றிதழ்கள் உடன் எடுத்து  செல்ல வேண்டும்.
 prepare 4 set of copies ,
2 set. to CEO office.,
1 set for self
and
 1 set for office Copy

தேர்வுநிலைக்குரிய விண்ணப்ப படிவம். நமது அமைப்பின் இணையத்தில் உள்ளது தரவிறக்கம் செய்துகொள்ளவும்

http://maduraitnhspgta.blogspot.in/2016/03/blog-post_17.html

தேர்வுநிலைக்குரிய விண்ணப்ப படிவம். நமது அமைப்பின் இணையத்தில் உள்ளது தரவிறக்கம் செய்துகொள்ளவும்

01-06-2006 காலமுறை ஊதியம் பெற்ற ஆசிரியர்களே உங்கள் கவனத்திற்கு...
01-06-2016 அன்று தேர்வுநிலை பெற உள்ளதால் விண்ணப்பங்கள் CEO அலுவலகத்தில் அளிக்க தயார்செய்வீர்!

1. உங்கள் வேண்டுதல் கடிதம்.மற்றும் தலைமை ஆசிரியர் செயல்முறைகள் கடிதம்(Covering Letter)
2.தேர்வுநிலைக்குரிய விண்ணப்ப படிவம்.
3.பணி நியமன ஆணை.
4.பணிவரன்முறை ஆணை.
5.தகுதிகான்பருவம்   ஆணை.
6. 10வகுப்பு  மற்றும் +2 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் உண்மை தன்மை சான்று
7 . பட்டச் சான்றிதழ்
UG (Convocation only), PG (Convocation only)
& BEd (Convocation only) . மேற்கூறிய அனைத்து சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சான்றுகள்.
(PG ASST).மதிப்பெண் பட்டியல் இணைக்க தேவை இல்லை .
8. S. R Book  (Service Record) up to date entry.
9. விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின்  நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
மற்றும்பார்வைக்கு அசல்  (original ) சான்றிதழ்கள் உடன் எடுத்து  செல்ல வேண்டும்.
 prepare 4 set of copies ,
2 set. to CEO office.,
1 set for self
and
 1 set for office Copy

தேர்வுநிலைக்குரிய விண்ணப்ப படிவம். நமது அமைப்பின் இணையத்தில் உள்ளது தரவிறக்கம் செய்துகொள்ளவும்

http://maduraitnhspgta.blogspot.in/2016/03/blog-post_17.html

20 February 2016

ஓய்வூதியம் என்றால் என்ன?

நோபல் பரிசும்,இந்தியாவின் மிகஉயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதை அமார்த்தியசென் ‘ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் சமமான மறுபங்கீடே’ என்று விளக்கமளித்துள்ளார்.

செல்வத்தை உற்பத்தி செய்வதே தொழிலாளிதான்.அதில் அவனுக்குப் பங்கு உண்டு. இந்த அடிப்படையில்தான் 1871ல் ‘ஓய்வூதியச் சட்டம் 1871’நிறைவேற்றப்பட்டது.

‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்தாகும்’ அரசியல் நிர்ணயச் சட்டத்தின் 31-ஆவது பிரிவின்படி ஓய்வூதியம் அவரது சொத்துரிமை. ஓய்வூதியம் என்பது ஓய்வு பெற்றவரின் கையில் சென்றுசெர வேண்டும் என ஓய்வூதியச் சட்டம் உறுதிப் படுத்துகிறது. அதை எந்த நீதிமன்றமும்கூடப் பறிமுதல் செய்துவிட முடியாது. உச்சநீதி மன்றம் மன்னர் மான்ய ஒழிப்பு வழக்கில் ‘ஓய்வூதியம் என்பது ஊழியரின் சொத்துரிமை. அரசியல் சட்டத்தின் 31ஆவது பிரிவு அளித்துள்ள இந்த உரிமையைத் தட்டிப் பறிக்க- இந்த அடிப்படை அம்சத்தை மறுதலிக்க நாடாளுமன்றத்துக்குக்கூட அதிகாரமில்லை’ என்று தீர்ப்பு அளித்துள்ளது.

நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்குத் பணிக்கொடை வழங்குவதற்காக பணிக்கொடைச் சட்டம் 1972 (GGratuity Act 1972)நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாட்டில் உள்ள தொழிலாளர் எவரும் பணிக்கொடை இல்லாமல் இருக்கக் கூடாது. எனவே அனைவருக்கும் பணிக்கொடை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பணிக்கொடையைப் பறிக்க அரசுக்கு உரிமை கிடையாது. ஓய்வுபெறும்போது ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெற கம்முட்டேஷன் உரிமையும் ஊழியருக்கு உண்டு.

ஒருவேலையில் சேர்ந்து சுமார் 35 முதல் 40 ஆண்டுகள்வரை தனது உழைப்பை நாட்டுக்குத் தந்து ஓய்வுபெறும் ஒருவர் தனது எஞ்சிய வாழ்நாளை ஓரளவாவது குறைந்தபட்ச வசதிகளோடு வாழவேண்டும் என்ற நோக்கில் அவர் பணியில் இருக்கும்போதே அவரது ஊதியத்தில் ஒருகணிசமான தொகையைப் பிடித்தம் செய்து அத்துடன் அதேஅளவுக்கு அரசின் பங்கையும் சேர்த்து ஓய்வுபெறும் நாளில் அளித்திட உருவானதுதான் வருங்கால வைப்புniநிதித் திட்டம்.இதற்காக நிறைவேற்றப்பட்டதுதான் பிராவிடண்ட் ஃபண்ட் சட்டம்

1952 (Employees Provident Fund Act 1952) அனைவருக்கும் பி.எஃப் இருக்கவேண்டும் என்றுசொல்லும் இந்தச்சட்டத்தின்படி எவர் ஒருவருக்கும் இதை மறுப்பது சட்டவிரோதச் செயலாகும்.

இந்தச் சமூகப்பாதுகாப்புத் திட்டங்களை பா,ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நிதித்துறை அமைச்சகம்22.12.2003ல் பிறப்பித்த உத்தரவு ஆபத்துக்குள்ளாக்கியது. எந்த ஒரு அரசு உத்தரவும் இந்திய அரசியல் சாசனத்தின்படி குடியரசுத் தலைவரின் பெயரில்தான் பிறப்பிக்கப் படவேண்டும். அதற்கு மாறாக மத்திய நிதித்துறை அமைச்சகம் ‘புதிய ஓய்வூதியத் திட்டம்’ என்ற உத்தரவைப் பிறப்பித்தது.
இதன்படி ஓய்வூதியவிதிகள். ஓய்வூதியத்தைத் தொகுத்துப்பெறும் விதிகள்,எக்ஸ்ட்ரா ஆர்டினரி ஓய்வூதிய விதிகள்,வருங்கால வைப்புநிதி விதிகள் 1.1.2004க்குப்பின் புதிதாகப் பணியில் சேர்பவர்களுக்குப் பொருந்தாது .

ஓய்வூதிய விதிகளில்தான் பணிக்கொடை விதிகளும், ஓர்ஊழியர் இறந்தபின் அவரது குடும்பத்திற்கு வழங்கும் குடும்ப ஓய்வூதிய விதிகளும்,பணிக்காலத்தில் ஊனம்,நோய் முதலியவற்றால் வேலை இழப்பவர்களுக்கு வழங்கும் இயலாமை ஓய்வூதிய விதிகளும் உள்ளன.

நிதித்துறை உத்தரவின்மூலம் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மேற்பார்வையிடவும், வளர்த்திடவும் ஓர்ஆணையம் 10.10.2003முதல் முன்தேதியிட்டு நியமிக்கப்பட்டது. இந்த ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும். அதன்பின் முறையான சட்டம் இயற்றி அதன்மூலம் உருவாகும் சட்டபூர்வமான ஆணையம் செயல்படும். இது பா.ஜ.க.வின் ஆட்சிக்காலத்தில் நிதித்துறையின் செயல்பாடு.
2004ல் ஆட்சிக்குவந்த காங்கிரஸ் தலைமையிலான முதல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பா.ஜ.க. கொண்டுவந்த நிதித்துறை ஆணையைச் சட்டபூர்வமாக்க 29.12.2004 அன்று ‘ஓய்வூதிய நிதியை ஒழுங்கு படுத்துதல் மற்றும் வளர்த்தல் ஆணைய அவசரச் சட்டத்தைப்(Pension Fund Regulatory And Development Authority Ordinance) பிறப்பித்தது. இந்த அவசரச் சட்டத்தைச் சட்டபூர்வ மாக்க2005 பிப்ரவரியில் P.F.R.D.A 2005 Bill –ஐ அறிமுகப்படுத்தியது.

ஆனால், ஐ.மு.கூட்டணி 1 அரசை வெளியில் இருந்து ஆதரித்த இடதுசாரிக்கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. எனவே இந்த மசோதாவை 14-வது மக்களவை முடியும்வரை அந்த அரசால் சட்டமாக்க முடியவில்லை.இதனால்,7.4.2005ல் அவசரச் சட்டம் காலாவதியானது.
பி.எஃப்.ஆர்.டி.ஏ 2005 பில் –ஐச் சட்டமாக்க முடியாத நிலையில் நிதித்துறை அமைச்சகம் 14.7.2008ல் மீண்டும் ஒரு சுற்றறிக்கை மூலம் இடைக்கால ஆணையத்தின் பதவிக்காலத்தை 8.4.2005முதல் என முன்தேதியிட்டு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்தது.

10.10.2003ல் நியமிக்கப்பட்ட அந்த ஆணையம் 10.10.2011ல்8ஆண்டுகளைக் கடந்துவிட்டது. 8.4.2005ல் மேலும் 5ஆண்டுகளுக்கு என நீட்டித்த காலமும் 7.4.2010ல் முடிவடைந்து விட்டது
8.4.2010 முதல் சட்டபூர்வத் தகுதியை இழந்துவிட்ட இம்மசோதாவைச் சட்டபூர்வமாக்க ஐ.மு.கூட்டணி2 அரசு 24.3.2011ல்‘.பி.எஃப்.ஆர்.டி.ஏ 2011 பில்’ என அறிமுகப் படுத்தியது.

ஆனால் இடதுசாரிக்கட்சிகள்-குறிப்பாக மார்க்ஸிஸ்ட் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் பாசுதேவ் ஆச்சார்யா ‘இந்த மசோதாவை வாக்கெடுப்பின் மூலம்தான் அறிமுகப்படுத்த வேண்டும்’ என நிர்ப்பந்தித்தார். அவையில் அன்று போதுமான உறுப்பினர் எண்ணிக்கை இல்லாததனால் காங்கிரஸ் கட்சி பா.ஜ.க. ஆதரவைப்பெற்று மசோதாவை அறிமுகப் படுத்தியது.

அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா சட்டமாக நிறைவேற்றப் பட்டுவிடுமானல் பழைய ஓய்வூதியத் திட்டதின் சமுதாயப் பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுவிடும். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 10% பிடித்தம் செய்யப்படும். இதற்கு இணையான தொகையை அரசு வழங்கும். இந்த ஓய்வூதிய நிதி மேலாளர்கள் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும்.ஓய்வு பெறும் நாளில் பங்குச் சந்தையின் ஏற்ற,இறக்கங்களுக்கேற்ப ஓய்வூதியம் கிடைக்கும்.பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டால் இலாபம் மட்டுமல்ல: மொத்த முதலீடும் பறிபோய்விடும். அதுமட்டுமா?

புதிய ஓய்வூதியத்திட்டத்தில்
1.ஓய்வூதியத்தைத் தொகுத்துப் பெறமுடியாது.
2.ஓய்வூதியத்திற்கு அகவிலைபடி சேராது.
3.குடும்பஓய்வூதியம் கிடையாது.
4.பணிக்கொடை கிடைக்காது.
5.புதிய ஊதியக்குழுக்கள் பரிந்துரைக்கும் ஊதியத்திற்கேற்ப ஓய்வூதியம் உயராது.

-இதுபோன்ற பல்வேறு ஆபத்துக்கள் உள்ளதால்தான் நாடுமுழுவதுமுள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்துப் போராடிவருகிறார்கள்.

இப்படி பட்ட cps காகத்தான் போராடுகிறோம் என்பதை cps  தோழர்களுக்கும் பொதுமக்களுக்கு ம் தெரியப்படுதுங்கள்.

#தி இந்து: தலையங்கம்: #புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வு

அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது. அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது.

ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப் பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல.

அமைச்சர்களின் உறுதிமொழி

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். அவர்களின் முக்கியமான கோரிக்கையும் இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.

அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். முதலமைச்சரின் கவனத்துக்கு கோரிக்கைகளைக் கொண்டுசெல்வதாகவும், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப் பதற்காகக் கூடுகிற சட்டசபை கூட்டத்தொடரின்போது பிப்ரவரி 16-ம் தேதி இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் உறுதியளித்தனர். ஆகவே, வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அமைச்சர்களின் உறுதிமொழியைச் சில சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.

ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப் பெறப்படும் என்பதை எழுத்துபூர்வமான உடன்பாடாக ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்துகொண்டால், வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்தது. அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.

எப்படி வந்தது?

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம்தான் இதை முதலில் அறிவித்தது. தனது ஆட்சியின் கடைசி ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஒரு நிர்வாக உத்தரவைப் போட்டது. அதன் மூலம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அமலாகியது.

இதற்கான சட்டம் செப்டம்பர் 2013-ல்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இந்தச் சட்டத்தை நிறை வேற்றியது. பாஜக இதை ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. 2014 பிப்ரவரி 1-ல்தான் இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அரசின் கெஜட்டில் அறிவிக்கப்பட்டது.

தமிழகம்தான் எல்லாவற்றிலும் முன்னோடி ஆயிற்றே? இந்தப் புதிய ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே

தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அப்போதைய அதிமுக அரசு அமல்படுத்திவிட்டது. 6.8.2003-ல் அரசாணையும் வெளியிட்டது. எனவே, தமிழக அரசு நினைத்தால் அதனைத் திரும்பப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம் - 2013 (Pension Fund Regulatory and Development Authority Act - 2013) என்பது மத்திய அரசின் சட்டத்துக்குப் பெயர். இந்தச் சட்டத்தின்3(4) வது பிரிவில், ‘எந்த மாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிவிக்கை மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் என்று பெயர். எனவே, மாநிலஅரசு விரும்பினால்தான், அந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம். விரும்பாவிட்டால், தன் ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயே வைத்துக்கொள்வதைச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.

எனவே, இந்தச் சட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பொருந்தும். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கோ வேறு தனியார், பொதுத்துறை அமைப்புகளுக்கோ நேரடியாகப் பொருந்தாது, கட்டுப்படுத்தாது என்பதுதான் உண்மையான நிலை.

தமிழகத்தால் முடியும்

பல மாநிலங்களில் நவம்பர் 2015 வரை 28 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் திரிணமூல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டமே நீடிக்கிறது. திரிபுராவும் அப்படியே. இந்த மாநிலங்களில் பழைய திட்டம் தொடர்வதை மத்திய சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.

எனவே, தமிழக அரசு உண்மையாகவே விரும்பினால், ஒரு மறு அறிவிக்கையை வெளியிட்டு, அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்பக் கொண்டுவர முடியும். மொத்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் என்ணிக்கையில் 60% பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டனர். மீதியுள்ளோர் பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே நீடிக்கின்றனர்.

புதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணம் ரூ.4,661 கோடி. அரசின் பங்களிப்பு ரூ.3,791 கோடி. மொத்தம் ரூ.8452 கோடி. இந்த தொகையை மாநிலத்தை ஆண்ட திமுக, அதிமுக அரசுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு பங்குச் சந்தையிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பிவைக்கவில்லை. இந்தக் காலத்தில் 3,404 பேர் ஓய்வுபெற்றுள்ளனர். 1,890 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு எந்தப் பணமும் தரப்படவில்லை.

விருப்பம் இல்லையா?

மத்திய அரசுக்கு அனுப்பிவைக்காத அந்தத் தொகை மாநில அரசின் கையில் இருக்கிறது. அரசு விரும்பினால், தன் பங்களிப்புத் தொகையான ரூ.3,797 கோடியை எடுத்துக்கொள்ளலாம். மீதியை அரசு ஊழியர்களின் சேமநல நிதியில் சேர்க்கலாம்.

புதிய ஓய்வூதியத்துக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். திமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர். இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று 2011 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஜெயலலிதா சென்னையில் அறிவித்தார். ஆனால், இப்போது அதிமுக அமைச்சர் ‘‘இது மத்திய சட்டம். அதனைத் திரும்பப் பெற மாநில அரசால் முடியாது’’ என்று கூறுவது இந்த விஷயத்தில் அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது.

சமீபத்தில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேலான முதலீட்டாளர்களின் பணம் பறிபோனது. இத்தகைய நிலையில்லாத, சூதாட்டம் போன்ற பங்குச் சந்தை விளையாட்டுகளில் ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பைப் போட்டு அரசு விளையாட வேண்டாம் என்றுதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதே சிறந்த தீர்வு.